மருதூர் ஏ.ஹஸன். கல்முனை: மருதூர்ப் பணிமனை, 408, மாவடி வீதி, சாய்ந்தமருது 01, 1வது பதிப்பு, 1993. (சாய்ந்தமருது: நேஷனல் அச்சகம்).
98 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 17.5×13 சமீ.
மருதூர் ஏ.ஹஸனின் புதுக்கவிதைத் தொகுதி. இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், மருதூர் அலிக்கான், ஏ. எம். கான், ஏ. பீர்முஹம்மது, ஏ. அக்பர் அலி, ஆகியோரின் உடன் பிறப்பு இவர். சாய்ந்த மருதுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் கிராம சேவை உறுப்பினர் ஐ. அலியார், அசனார் உதுமாநாச்சி தம்பதியினரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43577).