எஸ்.சிவா (இயற்பெயர்: சுப்பிரமணியம் சிவதர்ஷினி). வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
52 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 19.5×14 சமீ.
வவுனியா தேசியகல்வியியற் கல்லூரியின் உணவும் தொழில்நுட்பமும் பாடப் பிரிவைச் சேர்ந்த செல்வி சு.சிவதர்ஷனி அவர்களின் முதலாவத கவிதைத் தொகுப்பு இது. மரபை உள்வாங்கிய காலத்தின் தேவையுணர்ந்த சிவதர்ஷினியின் கவிதைகள், உணர்ச்சிகள், ஓசைகளை விட கருத்தாலும் மொழியாலும் வல்லமை பெற்று மிளிர்கின்றன. எளிமையும் நடைமுறைகளும் நிரம்பிக் கிடக்கின்றன.