ராஜகவி றாஹில். (இயற்பெயர்: ஏ.சீ.றாஹில், தொகுப்பாசிரியர்). நிந்தவூர் 05: ஆர்.கே.மீடியா வெளியீடு, 318, புதிய நகர், 1வது பதிப்பு, ஜுலை 2009. (அக்கரைப்பற்று: நியூ செலக்ஷன் பிரின்டர்ஸ்).
(2), 150 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 17×12 சமீ.
ஈழத்துத் தமிழ்க் கவிதைத் துறையில் ஈடுபாடுள்ளவர்களின் கவிதைகளைத் தேர்ந்து தனி நூலுருவில் வெளிக்கொண்டுவந்திருக்கிறார். இவ்விளம் கவிஞர்களின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள இத்தொகுப்பின் கவிவரிகள் எதிர்காலக் கவிஞர்கள் பலரை எமக்கு இனம்காட்டுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51152).