நாச்சியாதீவு பர்வீன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
xxvi, 112 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30-4153-1.
அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த நாச்சியாதீவு பர்வீனின் இரண்டாவது கவிதைத் தொகுதி இது. 39 கவிதைகளை உள்ளடக்கியது. தலப்புக்கேற்ப மனித மனவோட்டங்களை அப்படியே பிரதிபலித்திருக்கும் கவிதைகள் இவை. வாழ்வியல் அனுபவத்தினூடாக சமூக அவலங்களோடு அரசியலையும் மூடத்தனங்களையும் வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் கவிஞர் மிகத்தரமான கவிதைத் தொகுப்பொன்றினை எமக்கு வழங்கியுள்ளார். வெறும் இயற்கை ரசிப்போடு நின்றுவிடாமல், இவரது கவிதைகள் இயற்கைக்குள் கமூகத்தைப் பிரதிபலிக்க முனைகின்றன. இதனைக் குறிப்பாக, நிலவு இராச்சியம், இரவுத் திருடன், பட்டாம்பூச்சியின் பறத்தல் பற்றி, போன்ற கவிதைகளினூடாகக் காணமுடிகின்றது.