11675 மஜீத் கவிதைகள்: சொந்தமற்றுப்போன மண்ணைப்பற்றிய சித்திரமொழி. மஜீத்.

பொள்ளாச்சி 642 002: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (சென்னை: ஜோதி எண்டர்பிரைசஸ்).

204 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.

மஜீத் எழுதிய கவிதைகளின் மொத்தத் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. வாழ்வின் மீதான எளிய பாடல்கள், ஒரு இலையின் மரணம், சுள்ளிக்காடும் செம்பொடையனும், புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன ஆகிய நான்கு கவிதைத் தொகுதிகளையும்  நூலுருவில் வெளிவராத சில கவிதைகளையும் இந்நூல் முழுமையாக உள்ளடக்குகின்றது. அக்கரைப்பற்றை வாழ்விடமாகக்கொண்ட கவிஞர் மஜீத் தற்போது கொழும்பில் வாழ்கிறார். தனது பண்பாட்டுப் படிமங்களை சின்னஞ்சிறு கதைகளாகவும், சக மனிதர்களின் வாழ்வியலாகவும் எடுத்துரைப்பதில் தனி நுணுக்கங்கள் பெற்றவர். தமிழில் காதலைப் பாடுவதில் மஜீதைப் போன்ற தனித்துவம் நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் அரிதானதாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53003).

ஏனைய பதிவுகள்