மருதமுனை 3: எம்.எம்.மிஹ்ழார், ஆயிஷா வெளியீட்டகம், 520/1, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, நவம்பர்; 2013. (மருதமுனை: அப்னா பிறின்டர்ஸ்).
80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54169-7-9.
ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுதி. மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகமாணி சிறப்புப்பட்டம் பெற்றவர். பட்டதாரி ஆசிரியராக மருதமுனை கமு/அல்மனார் மத்திய கல்லூரி, ஷம்ஸ் மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் சிறிதுகாலம் பணியாற்றியவர். இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு அட்டாளைச்சேனை, பொத்துவில், ஓட்டமாவடி பிரதேச செயலகங்களில் பணியாற்றிய பின்னர், கல்முனை பிரதேச செயலாளராகப் பணியாற்றிய வேளையில் இந்நூல் வெளிவந்தது. மருதமுனையில் 126 வருடங்கள் வாழ்ந்து மறைந்த மீராலெவ்வை இப்றாலெவ்வை என்பவரின் மனைவியே இக்கவிஞரின் தந்தையின் தாயாராவார். அப்பெண்மணியின் அழகைக் குறித்து மாம்பழக்கொச்சி என ஊரார் அழைத்ததை நினைவுகூர்ந்து தனது 53 கவிதைகளைக்கொண்ட இக்கவிதைத் தொகுதிக்கும் அப்பெயரையே வைத்து அழகு பார்த்துள்ளார்.