11679 மிதக்கும் கனவுகள் (கவிதைகள்).

முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல். மருதமுனை: ஆயிஷா வெளியீட்டகம், 520, மசூர்மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (மருதமுனை: அப்னா பிரின்ட்).

xiv, 71 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42405-1-3.

மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகமாணி சிறப்புப்பட்டம் பெற்றவர். பட்டதாரி ஆசிரியராக மருதமுனை கமு/அல்மனார் மத்திய கல்லூரி, ஷம்ஸ் மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் சிறிதுகாலம் பணியாற்றியவர். இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு அட்டாளைச்சேனை, பொத்துவில், ஓட்டமாவடி பிரதேச செயலகங்களில் பணியாற்றிய பின்னர், கல்முனை பிரதேச செயலாளராகப் பணியாற்றுகின்றார். மாம்பழக் கொச்சி என்ற தனது கவிதைத் தொகுதியையடுத்து வெளிவரும் நௌபலின் இரண்டாவது தொகுப்பு. 45 கவிதைகளைக் கொண்ட இத் தொகுதியிலுள்ள கவிதைகள் சிசுவின் உயிர்ப்பு, நிலவுக்குப் பதில் நீ, சூரியன் அழுத நாள், தூவானம், மௌனம் கலைகிறது, மகரந்த மணிகள், சாயங்கள் பூசியவர்கள், கவிதைகளின் பதிவு, முகமூடி உலகம், புழுதிக் குளிப்பு, ஒலிப்பேழை, போலியான நாட்டுப்பற்று, கனவுகளால் நெசவு, அரச சேவை இவர்கள், மீண்டும் அவள், சுவரில் முகங்கள், மிதக்கும் கனவுகள், வாக்குறுதிகள், நீ, பசுமை படர் நாட்கள், பூமிப்பெண், மூத்தம்மா, வெற்றுக்கோஷங்கள், வனத்தின் அழகு, மீன்களின் அறுவடை, தலைப்புப் போடுங்கள்,  வாசித்த கவிதை, ஆகாயத்தோட்டம், கனவுத் தொழிற்சாலை, மழைவெள்ளம், கனவில் நீந்தும், எறும்புகள், மாலைக்கருக்கலில், வட்டா, யாக்கையின் புன்முறுவல், மழை, திருமணம், விதைகள், இன்னுமொரு மாம்பழக் கொச்சி, காத்திருக்கும் இவர்கள், எம் தலைமைகள், கவிதைகள், மாயக்கண்ணாடி, தூது, ஏதிலிகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Titanic The brand new Tunes

Articles Wood’s Rebellious Spirit Decorative mirrors Rose growing Out from the Shadow Of A conservative | 21 Online mobile casino app Extra Tips Regarding the

casino

Casino en vivo Juegos de casino Casino Er zijn echter variaties tussen al deze verschillende bonussen, want er zullen eisen aan verbonden zijn. Aan dit