அன்புடீன் (இயற்பெயர்: ப.மு.கலந்தர் லெவ்வை). அக்கரைப்பற்று 4: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, கிழக்குப் பிராந்தியம், 1வது பதிப்பு, ஜனவரி 1988. (அக்கரைப்பற்று: பாத்திமா மின் அச்சகம், அஞ்சலக வீதி).
(23), 24-124 பக்கம், விலை: ரூபா 24., அளவு: 18.5×13 சமீ.
கவிஞர் அன்புடீனின் 12ஆவது கவிதைத் தொகுதி. 1970க்குப் பின்னரான காலகட்டத்தில் பத்திரிகைளுக்கு எழுதியவையும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டவையுமான 31 கவிதைகள் இவை. தளிருடலை நெளியாதே, சாவதா நாம் வாழ்வதா, அலைகள், சின்ன மலர் சிரிக்கிறது, உன்னிடம் ஒரு வினா, உரிமையும் உடமையும், புதிதாய் எழுந்த இரவி, மானுடம் எங்கே, நிழல்கள், இலந்தைப் பழத்துப் புழுக்கள், சாவை வென்ற சரிதை, ஒரு தபால்காரனின் ஏக்கம், மையித்து வீடு, ஒழுக்கு, செங்கப்படை வயலை நோக்கி, மனைவிக்கு ஒரு மடல், ஈனநிலை கண்டு, செய்திக்குள் செய்தி, ஓணான்கள், ஜனநாயகம், கௌரவம், நுளம்புகளே, சிலந்திகள், ஒரு ஏழைத் தாயின் வீரத் தாலாட்டு, இந்த யுகத்தின் இருள்கள் இறக்க, பொதுமைப் பூக்கள், புதியதொரு வீடு, புதுமை, நிலவு சுடுகிறது, வெள்ளை மாளிகையில் பூத்த கறுப்பு மலர், புலரும் ஒரு புதுப்பொழுது ஆகிய தலைப்புகளில் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13751).