வல்வை மு.ஆ.சுமன். வல்வெட்டித்துறை: கலை கலாசார இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 2014. (அல்வாய்: மதுரன் கிறாபிக்ஸ் அன்ட் ஓப்செட் பிரின்டேர்ஸ்).
60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 19.5×11 சமீ.
எங்கள் பாரம்பரியம், கலாசாரம், ஆகியவற்றை சுமந்துசெல்லும் நோக்குடன் படைக்கப்பட்ட இந்தக் கவிதைத் தொகுதியில் ஜப்பானிய ஹைக்கூ பாணிக் கவிதைகளும் உள்ளடங்கியுள்ளன. சோக உணர்வே கவிதைகளின் அடிநாதமாக அமைந்துள்ளது. சுமனின் மூன்றாவது கவிதைத் தொகுதி இது. நெடுநாட்கள் தன் ஊரைப் பிரிந்து கப்பலில் வேலைவாய்ப்புப்பெற்று வாழ்ந்த ஒருவனின் பிரிவுத்துயர் கடலோடி வாழ்வு என்ற கவிதையில் சுயசரிதமாகவே புலப்படுகின்றது. இவ்வாறே நாய்க் கனவு, இயற்கை நிழல், ஒரு பறவையின் கனவு, வெற்றியை நோக்கிய ஒரு பயணம் போன்ற கவிதைகளும் கவிஞனின் சிந்தனையின் பல்பரிமாணங்களை எடுத்துக்காட்டுகின்றன.