11682 முகாரி பாடும் முகங்கள்.

வல்வை மு.ஆ.சுமன். வல்வெட்டித்துறை: கலை கலாசார இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 2014. (அல்வாய்: மதுரன் கிறாபிக்ஸ் அன்ட் ஓப்செட் பிரின்டேர்ஸ்).

60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 19.5×11 சமீ.

எங்கள் பாரம்பரியம், கலாசாரம், ஆகியவற்றை சுமந்துசெல்லும் நோக்குடன் படைக்கப்பட்ட இந்தக் கவிதைத் தொகுதியில் ஜப்பானிய ஹைக்கூ பாணிக் கவிதைகளும் உள்ளடங்கியுள்ளன. சோக உணர்வே கவிதைகளின் அடிநாதமாக அமைந்துள்ளது. சுமனின் மூன்றாவது கவிதைத் தொகுதி இது. நெடுநாட்கள் தன் ஊரைப் பிரிந்து கப்பலில் வேலைவாய்ப்புப்பெற்று வாழ்ந்த ஒருவனின் பிரிவுத்துயர் கடலோடி வாழ்வு என்ற கவிதையில் சுயசரிதமாகவே புலப்படுகின்றது. இவ்வாறே நாய்க் கனவு, இயற்கை நிழல், ஒரு பறவையின் கனவு, வெற்றியை நோக்கிய ஒரு பயணம் போன்ற கவிதைகளும்  கவிஞனின் சிந்தனையின் பல்பரிமாணங்களை எடுத்துக்காட்டுகின்றன.

ஏனைய பதிவுகள்

17146 அழியாத முதுசம்.

மலர்க் குழு. வேலணை: அமரர் திலகவதி குணரெத்தினம் நினைவு மலர், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, மே 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 144 பக்கம், புகைப்படத்

12224 – சமாதானத் தூது: கட்டுரைத் தொகுப்பு.

ஜெஹான் பெரேரா (ஆங்கில மூலம்), மா.செ.மூக்கையா (தமிழாக்கம்). கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விஹாரை வீதி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,

10086 முப்பொருள் உண்மை விளக்கம்.

மு.இளையதம்பி. யாழ்ப்பாணம்: மு.இளையதம்பி, 2வது பதிப்பு, 1986, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: ஈகிள் பிறிண்டிங் வேக்ஸ் லிமிட்டெட், 161, சிவன் பண்ணை வீதி). (15), 215 பக்கம், விலை: ரூபா 32., அளவு: