காயத்திரி முத்துராசா. வவுனியா: செல்வி காயத்திரி முத்துராசா, இல. 50/3, குருமண்காடு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: ஜெனிக்கா கிறாபிக்).
100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
ஒரு இளம்பெண்ணின் உள்ளத்தில் உறைந்துகிடந்து வெளிவரத்துடிக்கும் உணர்வுகளின் வெளிப்பாடாக இவ்விளம் படைப்பாளியின் கன்னிக் கவிதைகள் அமைகின்றன. அருவி என்ற பெயரில் அறியப்பெற்ற செல்வி காயத்திரி முத்துராசா தன் இளமைக்காலம் முதல் எழுதிவைத்திருந்த கவிதைகளை இங்கு நூலுருவில் வழங்கியிருக்கிறார். இவர் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் மாணவ ஆசிரியையாவார்.