11687 முதன் முதலாய்: கவிதைகள்.

கு.வீரா. கிளிநொச்சி: சி.சேரலாதன், பொறுப்பாளர், நிதர்சனம், தர்மேந்திரா கலையகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (கிளிநொச்சி: நிலா பதிப்பகம், புகையிரதப் பாதை வீதி).

(14), 126 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 90., அளவு: 21×14 சமீ.

கவிஞர் பாடலாசிரியர், நடிகர் என பல திறமைகளை கொண்ட முன்னாள் ஈழ விடுதலைப் போராளியான கு.வீரா தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் நிலவரம் என்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலமும் பிரபல்யம் பெற்றிருந்தார். யுத்தத்தின் பின்னர் தடுப்பு முகாம் புனர்வாழ்வு என பல தடைகளையும் துன்பங்களையும் கடந்து வந்த கவிஞர் வீரா தற்போதும் தனது இரு கவிதை தொகுதி நூல்களை ‘கண்ணடிக்கும்காலம்’, ‘இரண்டாவது உயிர்’ ஆகிய தலைப்புகளில் 2015இல் வெளியிட்டிருந்தார். அவரது நிதர்சனம் பணிக்காலத்தில் வெளியிடப்பட்ட மதலாவது நூலாக ‘முதன் முதலாய்’ என்ற நூல் அமைந்துள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33059).

ஏனைய பதிவுகள்