கவிஞர் அபூபக்கர் (இயற்பெயர்: A.M.அபூபக்கர்). காத்தான்குடி 2: முனீரா பப்ளிக்கேஷன்ஸ், 86, பழைய வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1983. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில் வடக்கு).
62 பக்கம், தகடுகள், விலை: ரூபா 5., அளவு: 17.5×12.5 சமீ.
கவிதாஞ்சலி (1977), நான் (1980), நீ (1981), நம்பிக்கை மணிகள் (1982) ஆகிய கவிதைகளைத் தொடர்ந்து வெளிவரும் இக்கவிதைத் தொகுதியில் கவிஞர் அபூபக்கரின் நீண்ட கவிதைகள் இரண்டு உள்ளன. கவிஞரின் மத அனுபவத்தை வெளிக்கொணரும் கவிதைகளாகக் கருதப்படும் மதச்சார்புக் கவிதைகள் இவை. ‘அவர் தனது மதப்பாரம்பரியத்தினுள்ளே தனது உணர்ச்சி முழுமையைக் காண விரும்புகிறாரென்பதும், அந்த மத இலட்சிய நிறைவிலேயே தமது நிறைவினையும் காணவிழைகின்றார் என்பதும் (இக்கவிதைகளிலிருந்து) தெளிவாகின்றது’ என்று இந்நூலுக்கு விரிவான அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17242).