11690 மூடமறுக்கும் விழிகளும் துடிக்கும் இதயமும்:கவிதைகள்.

மருதூர் ஏ.மஜீத். கல்முனை: மருதூர் வெளியீட்டுப் பணிமனை, 436 பழைய சந்தை வீதி, சாய்ந்தமருது 03, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (கொழும்பு 10: யூ.டீ.எச். கொம்பியூபிரின்ட், 51/42, முகைதீன் மஸ்ஜித் வீதி).

124 பக்கம், விலை: ரூபா 285., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1058-04-3.

இத்தொகுப்பில் பல்வேறு முக்கியஸ்தர்கள் தொடர்பான இரங்கலும், பிரமுகர்கள், நிறுவனங்கள் தொடர்பான வாழ்த்துமாக முப்பத்தொன்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலிலுள்ள கவிதைகள் குறித்தும் அவை எழுந்த நோக்கம் குறித்தும் ஆசிரியர் குறிப்புரைகளும் வழங்கியிருக்கிறார். தனது குருநாதர் கலாநிதி எஸ்.தனஞ்செயராஜசிங்கம், தந்தையார் ஐ.அலியார், சங்.சகோதரி சிசிலியா மேரி, எழுத்தாளர் பெனடிக்ற் பாலன், எம்.எச்.எம். அஷ்ரப், றிஸ்வி சின்னலெப்பை, அ.ஸ.அப்துஸ் ஸமது, சங்.அப்துல் ரஷீத் தங்கள், கர்பாலா யுத்தத்தில் ஹ{ஸைன் அவர்களின் குதிரை, அன்னையார் அலியார் உதமானாச்சி, மாணவன் நற்பிட்டிமுனை பழீல், நண்பர் அல்ஹாஜ் வீ. அப்துல் கபூர், பாவலர் பஸீல் காரியப்பர், அருட்கொடை நபி (ஸல்) அவர்கள், முஹம்மது நபி (ஸல்) ஆகியவர்களின் பேரில் பாடிய  இரங்கற் கவிதைகளை முதலாம் பிரிவிலும், கலாநிதி சு.வித்தியானந்தன், மருதமுனை அல்-மனார் மகா வித்தியாலயம், சம்மாந்துறை மகா வித்தியாலயம், கல்முனை ஸாஹிரா கல்லூரி, பிரதமர் ஆர். பிரேமதாசா, எம்.எம்.மயோன் முஸ்தபா, கல்முனை பாத்திமா கல்லூரி அதிபர் எஸ்.ஜே. மத்யூ, பிரதி அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீத், தினகரன் ஆசிரியர் எஸ்.சிவகுருநாதன், வர்த்தக அமைச்சர் ஏ.ஆர். மன்சூர், அன்னை தெரேசா, டாக்டர் முருகேசம்பிள்ளை, ஜனாதிபதி ஆர். பிரேமதாச, கலாநிதி. ம.மு. உவைஸ், அமைச்சர்கள் எ.எச்.எம். அஸ்வர், எம்.எச்.எம்.அஷ்ரப், ஏ.எச்.எம்.பௌஸி, ஏ.எல்.எம். அத்தாவுல்லா, ரவூப் ஹக்கீம், செனெட்டர் மசூர் மௌலானா,  கலாநிதி காலிதீன், நாடாளுமன்ற உறப்பினர் றஜாப்டீன் மற்றும் கிழக்கின் இன ஒற்றுமை பற்றி,  என ஆசிரியர் வழங்கிய வாழ்த்துக் கவிதைகள் இரண்டாவது பிரிவிலும் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54728).

ஏனைய பதிவுகள்