தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
88 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30-6389-2.
இதில் 36 பாடல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலுக்கான அணிந்துரையை பேராசிரியர் துரை மனோகரன் அவர்களும், வாழ்த்துரையை திருமதி. ரதி தேவசுந்தரம் அவர்களும் நூலின் பின்னட்டைக் குறிப்பை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்களும் வழங்கியிருக்கின்றார்கள். ஆன்மீகப் பாடல்கள், சமூகப் பாடல்கள், காதல் பாடல்கள், கானா பாடல்கள் என எல்லா துறைகளிலிருமிருந்தும் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. சமூகம் காதலென சகல பக்கங்களையும் தொட்டுக்காட்டும் வரிகளில் சுவையமுது வழிந்தோடுகின்றது. 36 பாடல்களில் ‘பாதைகள் புதிது’ எனும் பாடல் இசையமைப்பாளரும் பாடகருமான ஜனாப் டோனி ஹசன் அவர்களால் 2011ல் இசையமைத்து ஹஜ் பெருநாளன்று பாடப்பட்டுள்ளது. ‘மக்காவில் பிறந்த மாணிக்கமே’ எனும் பாடல் பாடகரும் இசையமைப்பாளருமான கலைக்கமால் அவர்களால் 2014ல் இசையமைத்து பாடப்பட்டது. இந்நூல் கவிஞரின் ஒன்பதாவது நூல் வெளியீடாகும்.