சுவிஸ் ரஞ்சி, தேவா-ஜேர்மனி (தொகுப்பாசிரியர்கள்). கோயம்புத்தூர் 641 015: ஊடறு வெளியீடு, விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்களிபாளையம் வடக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2007. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
128 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 22×17 சமீ.
ஆழியாள், அனார், புதிய மாதவி, மதனி, லீனா மணிமேகலை. வேதா இலங்காதிலகம், சுகந்தி சதர்சன். மோனிகா, பாமா, நளாயினி தாமரைச்செல்வன், பஹீமா ஜஹான், விஜயலட்சுமி, சுல்பிகா, திலகபாமா, சாரங்கா தயாநந்தன், எஸ்.இஸ்மாலிகா, பாமதி பிரதீப், கமலா வாசுகி, நவஜோதி, குட்டிரேவதி, தர்மினி, மலரா, பெண்ணியா, குமுதினி தங்கராஜா, கற்பகம் யசொதர, உதயச்செல்வி, சத்தியா சத்தியதாஸ், அரங்கமல்லிகா, சுகிர்தராணி, தில்லை, மரியா என்டனீற்றா, சமீலா யூசுப் அலி, சலனி, மாதுமை, வைகைச் செல்வி ஆகிய பெண்கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றள்ளன.
மை கவிதைத்தொகுதி பெண்ணியச் சிந்தனைகளை பெண் எழுத்துக்களோடு பதிவு செய்ய முனைந்துள்ளது. இத்தொகுதியில் உள்ளடங்கிய கவிதைகள் வரையறைகளை கடக்கத் துடிக்கும் பிரவாகமாக மிளிர்கின்றன. எமது சமுதாய அலகுகளின் அனைத்து மூலைகளிலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். இவ்வொடுக்குமுறை ஒரு நூற்றாண்டுக்குள் திடீரென எழுந்ததல்ல பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்து ஆண்மேலாதிக்கச் சிந்தனைகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டவை. இவை கலாச்சாரத்தின் அடித்தளத்தில் உறுதியாக ஊன்றப்பட்டவை. ‘மை” தொகுதியின் கவிதைகள் முழுமொத்த பெண் சமூக விடுதலைக்கோஷங்களை கையிலெடுத்த பெரும் பரப்பில் ஆங்காங்கு நின்று தன் இயலுமையின் எல்லைவரை முன்வைக்கின்றன. பெரும்பாலான கவிதைகள் ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான மாற்றுக் கலாச்சாரத்தை கட்டமைக்கும் பணிக்கு உழைக்க வந்திருக்கின்றன. வெவ்வேறு நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்களின் ஒருமித்த சிந்தனைகளை ஒன்றாய் வாசிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளமை ‘மை’ யின் அடர்த்தியை அதிகமாய் உணரத் தூண்டுகிறது. தமிழ்க்கவிதையுலகில் பெண் எழுத்துக்கான வரிசையில் ‘மை’க்கு நீண்ட கால இடமுண்டு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45406).