யாழரசு (இயற்பெயர்: தவராசா தர்ஸன்). வவுனியா: தமிழ்ப் பண்ணை, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (வவுனியா: சுபாஸ் அச்சகம், இல. 214, புகையிரத நிலைய வீதி).
xi, 52 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-44115-0-0.
கவிஞர் யாழரசு இக் கவிதை நூலில், தான் சார்ந்த சமூகத்தின் வாழ்வியல் யதார்த்தத்தை தேர்ந்த கவி வரிகளால் பதிவுசெய்திருக்கிறார். இந்தியாவின் காந்திக் கிராமத்தின் கிராமியப் பல்கலைக்கழகத்தில் தனது இளமானிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட யாழரசு சமூக சேவைகளில் ஈடுபாடும் மனிதாபிமானச் செயற்பாடுகளில் அவாவும் கொண்டவர். சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வு அவசியமானதும் அவசரமானதும் என்பதை இன்றைய காலவோட்டத்தினூடே ஆழமாகப் புரிந்துகொண்டவர். தன் கவிதைகளிலும் அதனைப் பதிவுசெய்துள்ளார். மௌனமொழிகள் என்ற கவிதை முதல் தயாராகிறேன் பாரம் சுமக்க என்ற கவிதை வரையிலான 36 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.