11697 வண்ண எண்ணங்கள்.

முகில்வாணன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).

143 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-7654-05-8.

முகில்வாணன் அவர்களின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தான் பிறந்த மண்ணையும் பேசும் மொழியையும் பேணும் நாகரீகம் போன்றவற்றையும் மாத்திரம் மையப்படுத்தியதாக அல்லாமல், காலமாற்றத்தைக் கருத்திற்கொண்டு பல்வேறு களங்களில் நின்று பாடும் கவிதைகளாக அமைகின்றன. தியாகிகள், விஞ்ஞானிகளால் மனித இனத்தின் விடிவிற்காகக் கண்டறியப்பட்ட சாதனங்கள் பலவும் அறிவிலிகளின் சுயநலத்திற்காக அஞ்ஞானத்துறைகளில் பயன்படுத்தப்பட்டு மனித இனத்தை இருளிலேயே தள்ளிவைத்திருந்து, தெய்வ அருளினாலே தாங்கள் வாழ எண்ணும் சோம்பேறிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவும் சில கவிதைகள் அமைந்துள்ளன. முகில்வாணன் (முகில்வாணன் இராசையா, மட்டக்களப்பு, இலங்கை) ஈழத்து தமிழ் கவிஞர். சில காலம் ஜெர்மனியில் வாழ்ந்தவர். இவர் தென் இந்தியாவில் இறையியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர். திருமறை போதகராகப் பணிபுரிகின்றார்.

ஏனைய பதிவுகள்