11698 வண்ணத்துப் பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம்.

றியாஸ் குரானா. அக்கரைப்பற்று 6: றிஸ்மியா ஜஹான், இயல்பு பதிப்பகம், 228, 5/6, பொது வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (அக்கரைப்பற்று: புதிய செலெக்ஷன் அச்சகம்).

64 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.

றியாஸ் குரானாவின் இரண்டாவது படைப்பு. இங்கு ஒரு இளைஞனின் வாழ்வியல் அசைவுகள் நுட்பமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தான் சார்ந்த சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துயர்களை, துரோகத்தை மாத்திரமன்றி காதலையும் அடிஆழத்து உணர்வுகளுடன் சொல்லில் வடித்திருக்கிறார். இரத்தமும் சதையுமாய் வாழ்ந்த, உணர்ச்சிகளுள் தோய்ந்தெழுந்த ஒரு இளைஞனின் வாழ்வும் மனப் போராட்டமும் கலந்த ஒன்றாக இக்கவிதைகள் அமைகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50658).

ஏனைய பதிவுகள்