கா.கந்தையா. கொழும்பு 11: க.கணேசரத்தினம், 72, 3ஆவது மாடி, CCSMC, 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (Colombo11: Lanka Asia Print (Pvt) Ltd., S-26, 3rd Floor, Central Super Market).
(2), 62 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ.
அமரர் கா.கந்தையாவின் கவிதைகளின் தொகுப்பு இது. பக்தியுள்ளம் கொண்ட ஒரு கவிஞனை இக்கவிதைகளில் தரிசிக்க முடிகின்றது. முழுமையை நோக்கி, இரவுபகலற்ற அந்தப் பரம இலக்கை நோக்கி அவர் செய்த யாத்திரையின் ஒவ்வொரு கணங்களையும் இக்கவிதைகளில் தரிசிக்கமுடிகின்றது. இக்கவிஞரின் நடையில் அவ்வப்போது துள்ளல், வேகம், தளர்வு, எல்லாமே காணப்படுகின்றன. வழியில் அவரது பாதங்களை வருடிய பசும்புல்லின் இதமான மென்மை, சுடுமணலின் வெம்மை, தைத்து அழவைத்த முட்களின் கூர்மை, காயப்படுத்தி ரணமாக்கிய கண்ணாடித் துண்டுகளின் கோரம் இவை அனைத்தும் நமது கண்களையும் உணர்ச்சிப் பெருக்கால் கலங்கவைக்கின்றன. புங்குடுதீவைச் சேர்ந்த அமரர் காசிப்பிள்ளை கந்தையா (17.8.1918-03.11.1993) அவர்களின் நினைவாக அவர் எழுதிவைத்த கவிதைகளைத் தாங்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22275).