செ.சிவசுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: ஆசுகவி செல்லத்துரை சிவசுப்பிரமணியம், மூளாய், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிறின்டர்ஸ், சங்கானை).
v, 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
குப்பி விளக்கின் வெளிச்சத்தில் மனிதத்தைத் தேடும் தனது முயற்சிக்கு வழித்துணையாக அழைக்கிறார் இக்கவிஞர். மனிதத்தை மதித்து நடக்கின்ற மிகப்பெரிய இலக்கை அடைவதற்கு வழித்துணையாக இறைவனால் உணர்த்தப்பட்ட சில விடயங்களை நீண்ட காலமாக மூளாய் வதிரன்புலோ சித்தி விநாயகர் தேவஸ்தான கரும்பலகைகளில் எழுதிவைத்து கோவில் பக்தர்களின் மனதில் கருத்துக்களைத் தூவிவந்தவர் சுப்புறு மாஸ்டர் என்று அன்பாக அழைக்கப்பட்ட செ.சிவசுப்பிரமணியம். அவ்வாறு அவரால் எழுதப்பட்ட 2800க்கும் அதிகமான செய்யுள்களில் தேர்ந்த 1111 பாடல்களைத் தொகுத்து இந்நூலில் வெளியிட்டுள்ளார். ஒவ்வொன்றும் 111 செய்யுள்கள் கொண்ட 10 அத்தியாயங்களில் இவை இடம்பெற்றுள்ளன. மேலதிகமாக ஒரு செய்யுள் இணைத்து மொத்தம் 1111 செய்யுள்களாக்கியுள்ளார். இவர் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் வசதிக் கட்டண ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றிய பின்னர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து சிலகாலம் பணியாற்றினார். பின்னர் ஸ்ரீலங்கா டெலிகொம் ஸ்தாபனத்தில் இணைந்து நீண்டகாலம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிவந்துள்ளார்.