மு.ஆ.சுமன். வல்வெட்டித்துறை: மு.ஆனந்தராசா, சுகந்தினி வாசம், ஏ.ஜீ.ஏ. ஒழுங்கை, நெடியகாடு, 1வது பதிப்பு, புரட்டாதி 2008. (அல்வாய்: மதுரன் கிறாபிக்ஸ் அன்ட் ஓப்செட் பிரின்டேர்ஸ்).
(4), viii, 40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
வலம்புரி நாழதழில் தன் முதற் கவிதையைப் படைத்து வழங்கிய, யாழ். சிதம்பராக் கல்லூரியின் தரம் 13 கலைப்பிரிவில் கல்வி கற்கும் இளம் கவிஞர் மு.ஆனந்தராசா சுமனின் கன்னிக் கவிதைகளின் தொகுப்பு இது. கவிஞனின் எண்ணங்களினதும் சிந்தனைகளினதும் உணர்வுகளினதும் வெளிப்பாடாக இவை அமைகின்றன.