வல்வைக் கமல் (இயற்பெயர்: சக்திவேல் கமலகாந்தன்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: குரு பிறின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
(4), 66 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19×12 சமீ., ISBN: 978-955-8354-57-7.
ஈழப்போராட்டம் கருக்கொண்ட பின்னர் பிறந்த ஓர் இளைஞன் போரினால் எத்தகைய உளைச்சல்களுக்கு உட்படுகிறான் என்பதைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைத்தொகுதி இது. போராட்டத்தின் விளைவுகளால் அலைந்துழல் வாழ்வுக்கு ஆளான ஒரு தலைமுறையின் உணர்வுகள் இக்கவிதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. போரின் கொடுமையினால் பல இழப்புகளைச் சந்தித்து இடம்பெயர்ந்து வன்னியில் வாழ்ந்த காலத்திலும் நலன்புரி முகாம்களிலும் கவிஞர் பட்ட துன்ப துயரங்களின் சாட்சியாக இத்தொகுதியில் உள்ள கவிதைகளில் பல காணப்படுகின்றன. போரினால் அன்று வானத்தின் அமைதி குலைந்தது. போர் முடிந்த பின்னரும் இடப்பெயர்வு, அகதி வாழ்வு, ஊனம், காணாமல் போனோர், போர் வடுக்கள் போன்றவற்றால் வானத்தின் அமைதி குலைந்தள்ளது என்று கவிதை வரிகளில் தனது ஏக்கத்தைப் பதிவுசெய்துள்ளார். (ஞானம் பதிப்பக வெளியீட்டு இலக்கம் 36ஆக வெளிவந்துள்ளது.