மு.திருநாவுக்கரசு (புனைபெயர்: விகடகவி). யாழ்ப்பாணம்: முத்தையா திருநாவுக்கரசு, இல 127/7ஏ, கோவில் வீதி, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், இல. 430, காங்கேசன்துறை வீதி).
xviii, 218 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54268-0-0.
உதயன்-சஞ்சீவி பத்திரிகைகளின் வாயிலாக ‘விகடகவி’ என அறிமுகமான அளவெட்டியூர் மு.திருநாவுக்கரசு, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர். மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். தனது இளம் பராயத்தில் தமிழரசுக் கட்சி மேடைகளில் அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர். இவர் எழுதி உதயனில் பிரசுரமாகிய கவிதைகளின் தொகுப்பு இந்நூலாகும். தனது 75ஆவது அகவையில் 09.11.2014 அன்று கொழும்பில் அமரத்துவமடைந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51347).