மன்னார் அமுதன் (இயற்பெயர்: ஜோசப் அமுதன் டானியல்). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், ஸ்டேஷன் வீதி).
99 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8715-56-7.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் பிரியா பிரசுரத் தொடரில் 51ஆவது நூலாக வெளியிடப்பட்டது. 47 கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில், கவித்துவ வீச்சும் உணர்ச்சி வெளிப்பாடும் கருத்தாழமும் கொண்ட கவிதைகள் பல இடம்பெற்றுள்ளன. வீரத்தையும் விவேகத்தையும் பாடும் கவிஞர் அழகியலையும் அழகாய்ப் பாடுகின்றார். காதலும், கனிரசமும், தாய்மையின் சிறப்பும் இவர் கவிதா வரிகளில் நர்த்தனமிடுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49961).