11711 விடியலைத் தேடி: ஓர் ஈழத் தமிழனின் கனவு – கவிதைகள்.

முருகேசு மயில்வாகனன். கனடா: முருகேசு மயில்வாகனன், இல. 701, 240 வெலஸ்லி வீதி கிழக்கு, ரொரன்ரொ, ஒன்ராரியோ, M4X IG5, 1வது பதிப்பு, 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 54 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,  அளவு: 21.5×14 சமீ.

கொடிகாமம் அல்லாரையைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த நூலாசிரியர் 1958இல் இலங்கை அரசாங்கத்தில் தட்டெழுத்தாளராகப் பணியாற்றியவர். 1992இல் ஓய்வுபெற்ற பின்னர் புலம்பெர்ந்து கனடாவில் குடியேறிய வேளையில்  பண்டிதர் சங்கரப்பிள்ளை குமரேசையா அவர்களிடம் மரபுக் கவிதைகள் படைக்கக் கற்றறிந்தவர். தான் படைத்த கவிதைகளை இந்நூலுருவில் பதிவுசெய்து வழங்கியிருக்கிறார். இவரது ஆசானான மதுரைத் தமிழ்ப் பண்டிதர் திரு. சங்கரப்பிள்ளை குமரேசையா இந்நூலுக்கான மதிப்புரையையும் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47738, 60763).

ஏனைய பதிவுகள்