ஆணி (இயற்பெயர்: ஆனந்த கு.ராமநாதன்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு).
112 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-81322-09-3.
விந்தையாய் விரியுதடி என்ற இக்கவிதைத் தொகுப்பில் காதல் கவிதைகள், கடவுள்சார்ந்த கவிதைகள், ஈழத்தின் மண்சார்ந்த கவிதைகள் ஆகியன பல்வேறு கருத்தியல்கொண்ட மரபுக் கவிதைகளாக, சந்தங்களில் அமைந்து படிப்பவர்க்குத் தமிழின்பத்தை வழங்கும்வகையில் தரப்பட்டுள்ளன. தன் இளமைக்காலத்தில் எழுதிவைத்தவையும் பிரசுரமானவையுமான கவிதைகளை விரிந்த தமிழகம் உள்ளிட்ட வாசகர் பரப்புக்கு விருந்தாக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60760).