செ.குணரெத்தினம் (மூலம்), ஈழத்துப் பூராடனார், எட்வேட் சந்திரா (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: விபுலானந்தர் நூற்றாண்டு நினைவு விழா சபை வெளியீடு, இணை வெளியீடு, கனடா: நிழல் வெளியீடு, சீவன் பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1991. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம். 1183 பொரஸ்ட்வுட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6).
x, 26 பக்கம், விலை: கனேடிய டொலர் 5.00, அளவு: 20.5×13 சமீ.
மட்டக்களப்பு அமிர்தகழிவாழ் இலக்கியமணி கவிஞர் செ.குணரெத்தினம் அவர்களால் சுவாமி விபுலாநந்தர் பற்றிப் பாடப்பெற்ற பாவியம். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு நினைவுவிழாச் சபையினரின் ஆதரவில் கனடா டொரண்டோ றிப்ளக்ஸ் அச்சகத்தினரின் அன்பளிப்பாக இந்நூல் விநியோகிக்கப்பட்டது. இதில் பிறந்த மண், பிறப்பு, குழந்தைப் பராயம், ஆரம்பக் கல்வி பயிலல், இளமையிலே கவிதை இயற்றும் ஆற்றல், ஆங்கில மொழி ஆரம்ப அறிவு, கிறிஸ்தவ மத அறிவு பெறல், மட்டக்களப்பில் ஆசிரிய பதவி, அன்னையாரை இழந்தார், கல்முனையில் ஆசிரிய பணி, ஆசிரியப் பயிற்சி, தாய்மொழித் தமிழாய்வில் நாட்டம், சமய ஆராய்ச்சி தமிழ் அறிவு பெறல், விஞ்ஞான வித்துவான், சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழிற் தந்தார், தாய்மொழி மீது கொண்ட பற்று, ஆங்கில வாணியை அழகு தமிழிற் தந்தார், என இன்னோரன்ன 62 தலைப்புகளின் கீழ்; இப்பாவியம் பாடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11132).