11717 விலங்கிடப்பட்டிருந்த நாட்கள்.

ஜிஃப்ரி ஹாஸன். வாழைச்சேனை-5: காகம், மஹ்மூட் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், ஸ்டேஷன் வீதி).

72 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-4644-10-6.

இந்த கவிதைப் புத்தகத்தில் நாற்பது கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தான் வாழும் சூழலையும் தான் பட்ட துயர்களையும் உணர்வூர்வமாக எழுத்துக்களாக்கிய இவர், போர்க்காலச்சூழலிலும் அதன் பின்னரான காலப்பகுதிகளையும் தனது எழுதுக்களூடாக ஆவணமாக்கி தந்துள்ளதுடன் கவிதைத் துறையில் தனக்கெனவொரு தனி இடத்தைத் தக்க வைத்திருக்கிறார். காகம் பதிப்பகம் இலங்கையின் வாழைச்சேனையைத் தளமாகக் கொண்டு இயங்கும் புத்தகப் பதிப்பு நிறுவனமாகும். எழுத்தாளர் ஏ. பி. எம். இத்ரீஸ், தனது சகோதரர்களின் உதவியுடன் 1998 ஆம் ஆண்டு இதனைத் தொடங்கினார். ஏபிஎம் மீடியா எனும் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இப்பதிப்பகம் செயற்பட்டு வருகிறது. ஜிஃப்ரி ஹாஸன் (1983) போரினால் முற்றிலும் சிதைக்கப்பட்ட பாலைநகர் என்ற சிறிய கிராமமொன்றில் பிறந்தவர். போரின் எல்லாவிதமானஅடையாளங்களுக்கும் இன்றுவரை அழியாத சாட்சியாக நிற்கும் கிராமத்தில் அன்றாடம் நடந்தேறும் நிகழ்வுகளின் தாக்கம் இவரது எழுத்துக்கள். பாலைநகர் ஜிஃப்ரி என்ற பெயரில் கவிதைகள் எழுதத் தொடங்கி தற்போது ஜிஃப்ரிஹாஸன் என்ற பெயரில் எழுதி வருகிறார். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியுள்ளார். சமூகவியல் துறையில் பட்டம்பெற்று தற்போது ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54401).

ஏனைய பதிவுகள்

13380 சனத்தொகையும் எரிபொருள் நுகர்வும்-ஆண்டு 10 (சனத்தொகைக் கல்வி மேலதிக வாசிப்பு நூல்).

கொட்வின் டி.சில்வா (மூலம்), ஸ்ரீமதி பி.சிவகுமாரன் (தமிழாக்கம்). கொழும்பு: சனத்தொகைக் கல்விக் குழு, இலங்கைக் கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (6), 46 பக்கம், விளக்கப்படங்கள், விலை: