தாமரைத்தீவான் (இயற்பெயர்: சோ.இராசேந்திரம்). திருக்கோணமலை: கலைப்பிரியன் வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2010. (திருக்கோணமலை: அஸ்ட்ரா பதிப்பகம்).
26 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 20×14 சமீ.
தமிழரின் பழம்பெரும் வரலாற்றையும், இலங்கையில் ஏற்பட்ட யுத்தம், பேச்சுவார்த்தை, அரசியல் நிலை, அழிவு, விலையேற்றம், இன அழிப்பு எனப் பல விடயங்களைக் கருப்பொருளாகக் கொண்ட நூறு பாடல்களைக் கொண்ட கவிதை நூல். ‘கும்மியடிக்கவும் கூடிப் படிக்கவும் கூழைக் கருத்தை விழுத்திடவும், செம்மொழி கொண்டொரு தேடல் புரிந்தனன் சிந்தைக்கெடாவிடில் வீழ்ந்திடுமே’ என்று ஆசிரியர் தனது கவிதை யாப்பின் நோக்கத்தை விளக்குகின்றார். இன்றைய ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளையும், அவர்கள் முகம்கொடுக்கவேண்டியுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளையும் தன் கவிதைகளில் தெளிவாகச் சொல்கிறார். இது ஒரு வரலாற்று இலக்கியப்பதிவு.