வி.ஜெகநாதன். திருக்கோணமலை: கீழைத்தென்றல் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).
xv, 98 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20×14 சமீ.
கீழைத்தென்றல் கலாமன்றத்தின் மூன்றாவது வெளியீடாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கவிதைவழியே சொல்லமுனையும் விடயம் குறித்த தெளிவும், கருத்தாழமும், கருத்தாடலும், அவற்றை வெளிப்படுத்தும் உத்திகளும் இப் படைப்பாளியிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்காட்டிநிற்கின்றன. நூலின் அட்டைப்பட ஓவியத்தை திருக்கோணமலை அருள்பாஸ்கரனும், கவிதைகளுக்குப் பொருத்தமான உருவகச் சித்திரங்களை செல்வன் யூட்சன் அவர்களும் திட்டியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32168).