தராஸ் ஷெவ்சேன்கோ (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட், 41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், 1வது பதிப்பு, ஜுலை 1993. (சென்னை 600014: பாவை பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 142, ஜானிஜான்கான் ரோடு).
183 பக்கம், விலை: இந்திய ரூபா 33., அளவு: 18×12 சமீ., ISBN: 81-234-0173-6.
உக்ரேனிய மகாகவி தராஸ் ஷெவ்சேன்கோ எழுதிய 33 கவிதைகளின் தமிழாக்கம் இது. மோகினி மாயை, கதெரினா, நெட்டிலிங்கம், என் எண்ணங்களே, வாயாடிப்பாணன், நீரில் மூழ்கிய நங்கை, ஒரு வேடிக்கையான கனவு, பணிப்பெண், காக்கஸஸ், காலம் கழிகிறது, இறுதி வேண்டுகோள், அக்கறை இல்லை, குடிசையின் பின்னால், ஆண்டுகள் பதின்மூன்று அப்பொழுது, அந்நியமாம் நாட்டினிலே, மீண்டும் வருக கவிதை பாட, ஜார்கள், இவ்வுலகச் சொர்க்கத்தில், இளைய தலைமுறை, ஆண்டைகளே, இறைவனிடம் கேட்பவை, கவிதைத் தேவி, புகழ், விதி, ஒரு கனவு, உடல்நலக் குறைவு எனக்கில்லை, நாட்டிற்காய், ஓ இறைவா, வேண்டுதல் 1, வேண்டுதல் 2, உழைக்கின்ற உள்ளங்கள், ஆர்க்கிமிடீஸ் கலீலியோ, நாளும் நகர்கிறது, காலமும் வந்தது, ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31399).