அயிசியலிஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, வைகாசி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).
xx, 132 பக்கம், விலை: கனேடிய டொலர் 25., அளவு: 21×13.5 சமீ.
ஆதிக் கிரேக்க நாடகத் தொடரில் இரண்டாவது தொகுதியாக வெளிவந்துள்ள இந்த மொழிபெயர்ப்புத் தொகுதியில் கிரெக்கக் கவிஞரான அயிசியலிசின் மூன்று நாடகங்களின் தமிழாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அகாமெமேனோன், விடுதலைத் தாகிகள் ஒறஸ்றிஸ், ஆவியின் மூர்க்கம் அல்லது எமண்டியஸ் ஆகிய தலைப்புகளில் இம்மூன்று நாடகங்களும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11315).