வில்லியம் சேக்ஸ்பியர் (மூலம்), இ.முருகையன் (தமிழாக்கம்), த.கலாமணி, கயிலைநாதன் திலகநாதன் (பதிப்பாசிரியர்கள்). வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புதுவளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை).
152 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.
ஆங்கில நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் (கிபி 1599) நாடகத்தின் கதாநாயகனாகவும், கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை உருவாக்கியவராகவும் சீசர் அறியப் பெறுகிறார். இவருடைய சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. சீசர் கிரேக்க வரலாற்றில் பெரும் வீரராகவும், போரின் பொழுது கருணை காட்டாதவராகவும், இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் அறியப் பெறுகிறார். ஜூலியஸ் சீசர் (புயரைள துரடரைள ஊயநளயச) (ஜூலை 12 அல்லது ஜூலை 13, கி. மு. 100 – மார்ச் 15, கி. மு. 44) ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர் ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார். இலத்தீன் உரைநடை இலக்கியம் படைத்த எழுத்தாளருமாவார். ரோமைக் குடியரசின் வீழ்ச்சிக்கும் ரோமைப் பேரரசின் எழுச்சிக்கும் வித்திட்ட நிகழ்வுகளில் முக்கியப் பங்கேற்றவர். கிமு 60 ஆம் ஆண்டில், சீசர், கிராசசு, பாம்பெ என்ற மூவரும் முதல் மூவராட்சியை ஏற்படுத்தினர் இந்த அரசியல் கூட்டணி பல ஆண்டுகளுக்கு உரோமானிய அரசியலில் தாக்கத்தை விளைவித்தது.; இவர்களது திட்டங்களை செனட்டின் பழமைவாத ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர். கிமு 51இல் சீசர் கவுலில் பெற்ற வெற்றிகள், உரோமின் ஆட்சியை ஆங்கிலக் கால்வாய் மற்றும் ரைன் ஆறு வரை நீட்டியது. இவை இரண்டையும் கடந்த முதல் உரோமை படைத்தலைவராக சீசர் ரைன் ஆற்றின் மீது பாலத்தைக் கட்டினார்; பிரித்தானியா மீதான முதல் ஊடுருவலை மேற்கொண்டார். கிமு 53இல் கார்கெ போரில் கிராசசின் இறப்பிற்குப் பின்னர் பாம்பெ செனட்டுடன் ஒத்துழைக்கத் துவங்கினார். தனது படைத்துறை சாதனைகளால் செல்வாக்குப் பெற்றிருந்த சீசர் பாம்பெயை எதிர்த்து நின்றார். கவுலில் போர் முடிவுற்றபோது செனட் சீசரை பதவி விலகி ரோமிற்குத் திரும்பப் பணித்தது. இதனை ஏற்க மறுத்த சீசர் கிமு 49 இல் ரூபிகான் ஆற்றைக் கடந்து ரோமானியப் படைகளுடன் கடந்து வந்து இத்தாலியை அடைந்தார். இதனால் விளைந்த உள்நாட்டுப் போரில் வென்ற சீசர் எதிர்ப்பற்ற சர்வாதிகாரியாக மாறினார். புதிய யூலியன் நாட்காட்டியை உருவாக்கினார். குடியரசின் அதிகாரங்களை மையப்படுத்தினார். எக்காலத்திற்கும் சர்வாதிகாரி என அறிவித்தார். கிமு44 இல், புரூட்டசின் தலைமையிலான செனட் உறுப்பினர்கள் சீசரைக் கொலை செய்தனர். சீசரின் வளர்ப்பு மகனான ஓக்டோவியசு, பின்னாட்களில் அகஸ்ட்டஸ், உள்நாட்டுப் போர்களில் வென்று ஆட்சியமைத்தார். இவரது ஆட்சியில் ரோமைப் பேரரசு உருவாகத் தொடங்கியது. ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் நாடகம் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமரர் இ.முருகையனின் மறைவின் பின்னர் நூலுருவாகியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56227).