சி.திருமலர்ப் பாக்கியம். மட்டக்களப்பு: அன்பு வெளியீடு, 18. நல்லையா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).
58 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 19.5×14.5 சமீ.
இறை வணக்கம், அசுவபதியின் ஆட்சிச் சிறப்பு, அரசி மாளதேவியின் பண்பு, சாவித்திரியின் பிறப்பு, முனிவரின் ஆச்சிரமம் சூழல், இல்லற தர்மம், முனிவரின் அறிவுரைகள், சத்தியவான் அறிமுகம், பெற்றோர் விபரம் அறிதல், திருமணப் பேச்சு, திருமணக் கோலம், சத்தியவான் சாவித்திரி இல்லறம், சாவித்திரியின் துயர், காட்டு வளம், சத்தியவான் உயிரிழத்தல், இயமனின் அறிவுரை, சாவித்திரியின் சம்வாதம், இயமனிடம் சாவித்திரி வரம் பெறல், உயிர்த்தெழுந்த சத்தியவான், சத்தியவான் சாவித்திரியைப் போற்றுதல், பெற்றோர் கவலை, அரசுரிமை ஏற்றல், பெற்றோரின் வாழ்த்து ஆகிய 23 அத்தியாயங்களில் இக்காவியம் விரிவாக எழுதப்பட்டுள்ளது. வித்துவான் எப்.எக்ஸ்.சி.நடராசா, கோவிந்தசாமி ஆகியோரின் அணிந்துரையும், பேராசிரியர் அப்துல் ரகுமானின் சிறப்புரையும், மகாவித்துவான் வீ.சீ.கந்தையா, நவாலியூர் சோ.நடராசன் ஆகியோரின் வாழ்த்துக் கவிதைகளும் இந்நூலுக்கு மெருகூட்டுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29035).