க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), திருமதி பி.ப.செல்வராசகோபால் (குறிப்புரை), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோஇ 1வது பதிப்பு, வைகாசி 1989. (கனடா M5S 2W9: ஜீவா பதிப்பகம், ரிப்ளக்ஸ் அச்சகம், 1108, வே வீதி, தொரன்ரோ).
xxiv, 774 பக்கம், விலை: கனேடிய டொலர் 50., அளவு: 21.5×13.5 சமீ.
ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால் (13 டிசம்பர், 1928 – 21 டிசம்பர் 2010) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். பன்னிரண்டாயிரம் பாடல்கள், 2070 பக்கங்கள், ஒன்பது காண்டங்கள் கொண்ட காவியம் படைக்கவேண்டும், அது 81 படலங்களாகவும், 567 அங்கங்களாகவும் விளங்கவேண்டும் என்ற திட்டமிடலுடன் உருவான தமிழழகி காப்பியத்தின் இரண்டாம் காண்டம் இந்த நூலாகும். மொழி உற்பத்திப் படலம், திராவிடமொழி உற்பத்திப் படலம், மொழியிலக்கணப் படலம், சங்கத் தமிழ்ப் படலம், பிரதேச மொழிக் கிளைப் படலம், ஆரிய மொழி நுழைவுப் படலம், கிளைமொழிப் படலம், கல்வெட்டுத் தமிழ்ப் படலம், தனித்தமிழ்ப் படலம் ஆகிய எட்டுப் படலங்களில் அடங்கியுள்ள செய்யுள்களால் இரண்டாம் பாகம் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12946).