காரை.செ.சுந்தரம்பிள்ளை. சுன்னாகம்: நடிகமணி வைரமுத்துவின் குடும்பத்தினர், உடுவில் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).
44 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் துணைவியார் திருமதி இரத்தினம் அம்மையார் (05-11-1928-13.08.2000) அவர்களின் நினைவாக 11.09.2000 அன்று வெளியிடப்பட்ட நூல். பூதத்தம்பி நாடகம் ஒல்லாந்தர் ஆட்சியின்போது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று நாயகனின் கதையைக் கூறுகின்றது. யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாயிருந்த ஒல்லாந்த அட்மிறல் அந்தோனி என்பவனின் கீழ் யாழ்ப்பாணப் பிரதம அமைச்சராகவிருந்த அந்திராசியின் உதவி அமைச்சராகப் பணியாற்றியவர். பூதத்தம்பியின் மனைவி அழகவல்லியின்மீது கொண்ட காமம் காரணமாக எழுந்த பல சம்பவங்களினால், பூதத்தம்பியும் அழகவல்லியும் அந்திராசியால் பழிவாங்கப்படுகின்றார்கள். இந்நாடகம் முதன்முறையாக நடிகமணி வி.வி.வைரமுத்துவினால் இசை நாடகமாக 1966ஆம் ஆண்டு காங்கேசன்துறையில் மேடையேற்றப்பட்டது.