11758 முல்லைக்காடு: மூவர் காவியம்.

ஜீவா-யாழ்ப்பாணன். பருத்தித்துறை: கலாபவனம், மேலைப்புலோலி, 1வது பதிப்பு, தை 1957. (பருத்தித்துறை: கலாபவனம்).

(16), 96 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ.

ஜீவா-யாழ்ப்பாணன் இருவரதும் கவிதை அஞ்சல்களுடன் தொடங்கி ஜீவா (பரிமளா இராஜதுரை), வி.கி.இரா (ராஜபாரதி), யாழ்ப்பாணன் (வே.சிவக்கொழுந்து) ஆகியோரின் அஞ்சல் ஓட்டக் கவிதைகளுடன்; இணையும் மூவர் காவியம் இது. முதலாம் பிரிவான முதற்கூடலில் ஜீவா (பரிமளா இராஜதுரை), யாழ்ப்பாணன் (வே.சிவக்கொழுந்து) ஆகியோருக்கிடையேயான பதினொரு கவிதை அஞ்சல் முதற்கூடல் என்ற தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் கூடலில் கொழும்பு நகர்ப் புதினம் (ஜீவா), அமர இலக்கியங்கள் சொல்லவேண்டும் (ஜீவா), கவிதையின் பிறப்பு (யாழ்ப்பாணன்), தங்கையின் தீராத ஆசை (ஜீவா),  அண்ணா உதவுவான் (யாழ்ப்பாணன்), அண்ணாவின் குரல் கேட்டேன் (ஜீவா), இன்கவி கேளீர்- வானொலிப் பேச்சு (யாழ்ப்பாணன்), நண்பன் உரையாடுகிறான் (வி.கி.இரா), அண்ணாவின் உபகரிப்புகள் (யாழ்ப்பாணன்), தங்கையின் போதனைகள் (ஜீவா), வங்கமும் வற்றுதலுண்டோ? (யாழ்ப்பாணன்), குயில்கூவி அழைக்கிறது (ஜீவா), யாழ் ஒலிக்க மறுக்கிறது (யாழ்ப்பாணன்), உளத்துடிப்பு (யாழ்ப்பாணன்), நெடுமலர்க் கரம் என்செய்யும்? (யாழ்ப்பாணன்), என் உயிர் அண்ணா (ஜீவா), ஓம் சக்தி எல்லாமீவாய் (யாழ்ப்பாணன்), மங்களம் (யாழ்ப்பாணன்) ஆகிய கவிதைகள் இடம்பெறுகின்றன. மூன்றாம் கூடல் கவிதைப் புனலாக எழுகின்றது. இதில் தேவிதுதி (யாழ்ப்பாணன்), சக்தியின் இருப்பிடம் (யாழ்ப்பாணன்), எம் தமிழ் (வி.கி.இரா), கவிதைப் பாசம் (பரிமளா இரா), உள்ளமிசைக்குது காவியம் (வி.கி.இரா), அவள் (யாழ்ப்பாணன்), வேதனைதான் வேதனமோ? (பரிமளா இரா), நாமும் பிறந்தோமடி(வி.கி.இரா), மட்டக்களப்பு (வி.கி.இரா), பாதரசம் பிறந்த கதை(பரிமளா இரா), கடற்கரை குடிசை வாயிலில் (யாழ்ப்பாணன்), படகோட்டியின் தீபாவளி (வி.கி.இரா), காதல் போச்சோ-நீரர மகளிர் (வி.கி.இரா), எங்கு காண்பாயடி(வி.கி.இரா), வீரத் தாலாட்டு (பரிமளா இரா), கதிர்காமம் சென்று வருவாய் (யாழ்ப்பாணன்), குடிசையில் சுவர்க்கம் (யாழ்ப்பாணன்), புதுமைப் பெண் (யாழ்ப்பாணன்) ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2433).

ஏனைய பதிவுகள்