மஜீத். அக்கரைப்பற்று: மஜீத், 1வது பதிப்பு, 2017. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ்).
(4), 24 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ.
தொடரறுமுறையில் எழுதப்பட்ட பொத்துவில் கவிஞர் மஜீதின் குறுங்காவியம். ஏறுவெயில் கவிதைகள், வாழ்வின் மீதான எளிய பாடல்கள், சுள்ளிக்காடும் செம்பொடையனும், ஒரு இலையின் மரணம் (கவிதைகள்), மஜீத் கவிதைகள், கதை ஆண்டி(குறநாவல்), மஜீதின் உயிர் பிழியும் கவிதைகள், முள்ளிவாய்க்காலும் நிலம் பெருக்கெடுத்த சவக்குழிகளும், ஆகிய நூல்களைத் தொடர்ந்து மூன்று பாகங்களாக இவ்வசன காவியம் எழுதப்பட்டுள்ளது. கவிஞர் மஜித் அவர்கள் நோயினால் பாதிப்படைந்துள்ள நிலையிலும் தொடர்ந்து தான் சொல்லச் சொல்ல தன் மனைவியினதும் மகளினதும் உதவியுடன் இம்மூன்றாம் பாகமும் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.