11762 மகாகவி ஹோமரின் ஒடிஸ்சி மகா காவியம்.

ஹோமர் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, சித்திரை 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

Lv, 460 பக்கம், புகைப்படம், விலை: கனேடிய டொலர் 45., அளவு: 21.5×13.5 சமீ.

ஒடிசி, இலியட் இரண்டும் ஹோமர் என்னும் கிரேக்கப் புலவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பண்டை கிரேக்க இதிகாசங்கள் ஆகும். இவை கி.மு 900 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இக்கவிதைக் காவியம் ஓடிசஸ் என்னும் மாவீரன் டிரோஜான் போரின் முடிவில் இத்தாக்காவில் உள்ள தன் வீட்டிற்குப் பயணப்படும் பத்தாண்டு கால வழிப்பயணத்தை விவரிக்கிறது. டிரோஜான் போர் இலியட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் அவனது மனைவி பெனிலோப் தன்னை பல மனிதர்களிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவனது மகன் டெலிமாச்சோசும் அவனைத் தேடுகிறான். வருகின்ற வழியில் ஓடிசசும் அவனது வீரர்களும் பல ஆபத்தான இடங்களையும் அச்சுறுத்தும் மிருகங்கள், அரக்கர்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இக்கதையில் வரும் ஒற்றைக்கண் அரக்கர்கள் (கைக்ளோப்கள்) ஆங்கில இலக்கியத்தில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர்கள். இந்த நூலின் பின்னணியிலேயே நீண்ட பயணத்தைக் குறிக்கும் ஆங்கில சொல் ‘ஓடிஸ்ஸி’ உருவானது. ஆங்கில வழியில் அமைந்த இந்தக் கிரேக்க காவியத்தை ஈழத்துப்பூராடனார் தமிழில் காவியமாக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11222).

ஏனைய பதிவுகள்