அல். அஸூமத். வெல்லம்பிட்டிய: அல்.அஸ{மத், இல.50, கோத்தமி மாவத்தை, வெலேவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 15: டலன்ட் பிரின்டெக், 20/4, மாதம்பிட்டி வீதி).
(8), 9-212 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-52134-3-1.
ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி இது. 1980க்குப் பின்னர் எழுதப்பட்டவை. மழலைச் சவால், புறமுதுகுகள், தாயாண்மை, தாயிற் சிறந்தொரு பிரசவமில்லை, அயன்னையம்மாதாய், நிலத்தாய், ஒரே ஒரு பெயர், பஞ்சத்து ஆண்டி, நட்பு, சைவப் பிள்ளை, சகுனம், துறக்கம்-இடைக்கம்-இறக்கம், நம்ம ஆளு நாட்ட ஆண்டாலும், சோமண்ணன், பிடுங்கல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 15 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கலாபூஷணம் அல் அஸ_மத் புகழ்மிக்க ஈழத்துக் கவிஞர். 1942.11.22 இல் பிறந்த இவரது இயற்பெயர் பொன்னையா வேலாயுதம். தந்தையார் கேரளத்தின் நெய்யாற்றின் கரையைச் சேர்ந்தவரும், கே.வீ.ராமன் நாயர் என்ற இயற்பெயரைக் கொண்டவருமான கே.வீ.பொன்னையா. இவரது தாய் மரியாயி. அல்-அஸ{மத்தின் இயற்பெயர் வேலாயுதம். காயல்பட்டினத்தில் தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய 13வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ‘தமிழ் மாமணி’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மூன்று இலங்கையருள் இவரும் ஒருவர். இவரின் பூவின் காதல் என்ற முதல் சிறுகதையும், முதல் கவிதையும் வீரகேசரியில் வெளிவந்தன. மாத்தளையான், விருச்சிகன், சாத்தன், அபூமுனாஃப், புல்வெட்டித்துறைப் புலவர் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், குறுங்காவியங்கள் எழுதியுள்ளார். புலராப் பொழுதுகள் (குறுங்காவியம்), மலைக்குயில் (கவிதைகள்), அல் அஸ{மத் கவிதைகள் (கவிதைகள் 1987), வெள்ளை மரம் (சிறுகதைகள் 2001), குரல் வழிக் கவிதைகள் (கவிதைகள் 2009), பிலால்: ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு (மொழிப்பெயர்ப்பு 2010), அறுவடைக் கனவுகள் (நாவல் 2010), ஆயன்னையம்மாதாய் (சிறுகதைகள் 2012) ஆகியவை இவரது நூல்கள். யாழ்ப்பாண இலக்கிய வட்டத்தின் மிகச்சிறந்த கவிதை நூலுக்கான விருது, தேசிய அரச சாஹித்திய விருது, சிரித்திரன் சுந்தர் நினைவு விருது, முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருது, தமிழியல் விருது ஆகிய விருதுகளையும் இலக்கியச் சாகரம், கவித் தாரகை ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார். சிறந்த சிறுகதைக்கான 2012ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய விருது, இந்நூலுக்கு 11.9.2013 அன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில்வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.