11767 ஆறாத காயங்கள்: சிறுகதைத் தொகுப்பு.

குந்தவை (இயற்பெயர்: இ.சடாட்சர தேவி). தொண்டைமானாறு: செல்லையா ஐயர் கலாசார மண்டபம், 1வது பதிப்பு, சித்திரை 2016. (பருத்தித்துறை: தமிழ்ப் பூங்கா, பிரதான வீதி, நெரல்லியடி).

vii, (4), 68 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×15 சமீ.

தொண்டைமானாறைச் சேர்ந்த இ.சடாட்சரதேவி (குந்தவை), 1963இல் ஆனந்தவிகடனில் வெளிவந்த சிறுமை கண்டு பொங்குவாய் என்ற முத்திரைக் கதையுடன் எழுத்துலகுக்கு அறிமுகமான ஈழத்துப் படைப்பாளி. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டம் பெற்றவர். புத்தளத்திலும், யாழ்ப்பாணத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இறுதியாக யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது முதற் சிறுகதைத் தொகுப்பு யோகம் இருக்கிறது என்ற தலைப்பில் 2002இல் மித்ர  வெளியீடாகப் பிரசுரமானது. 2008இல் வட மாகாண ஆளுநர் விருதினைப் பெற்றுக்கொண்டவர். ஈழப்போரில் சிதைந்துபோன மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் வலியோடு எடுத்துரைக்கிறது ஆறாத காயங்கள். தமிழகத்திலும் இலங்கையிலும் இவர் எழுதிப் பிரசுரமான ஒன்பது கதைகள்  இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. காலிழப்பும் பின்பும், இரும்பிடை நீர், கோழிக்கறி, நீட்சி, புழுக்கம், ஊழியமும் ஊதியமும், ஆநிரைகள், நாடும் நம்மக்களும், பாதுகை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 249461). 

ஏனைய பதிவுகள்