11771 காலநதியின் கற்குழிவு: யாழ்ப்பாணம் வாழ் 40 எழுத்தாளர்களின் சிறுகதைகள்.

த.கலாமணி, இ.சு.முரளிதரன், அ.பௌநந்தி, க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

vi, 322 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14 சமீ.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 எழுத்தாளர்களது சிறுகதைகளின்; தொகுப்பு இது. தெணியான் (மனிதத்தின் மரண ஓலம்), குப்பிளான் ஐ.சண்மகன் (தரு), செங்கை ஆழியான் (கீரிமலைக் குளியலும் கூவில் கள்ளும்), யோகேஸ்வரி சிவப்பிரகாசம் (கண்ணுக்குத் தெரியாமல்), குந்தவை (ஆநிரைகள்), இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் (காணாமல் போனவன்), த.கலாமணி (நீர்மை), க.சட்டநாதன்(அரும்பு), க.தணிகாசலம் (தடை), கொற்றை பி.கிருஷ்ணானந்தன் (அம்மாக்களின் ஆத்மா), கே.ஆர்.டேவிட் (மொனிற்றர் தெரிவு), நெடுந்தீவு மகேஷ் (தேடல்கள்), வல்வை ந.அநந்தராஜ் (பிச்சைக்காரர்கள்), கண.மகேஸ்வரன் (அவஸ்தை), வட அல்வை கே.சின்னராஜன் (தண்ணீர்), மு.அநாதரட்சகன் (ஆறா அவலம்), ம.ஆனந்தராணி (மீண்டும் வசந்தம்), சி.கதிர்காமநாதன் (முகாம்), ந.சத்தியபாலன் (முளை), பா.தனபாலன் (அப்பா வேணும்), இ.இராஜேஸ்கண்ணன் (பாடகனின் மரணம்), ச.இராகவன் (வாமன அவதாரம்), தாட்சாயணி (நர்மதாவின் கடிதங்கள்), கருணைரவி (வனயாகம்), யோ.கர்ணன் (இலியானா), இ.சு.முரளிதரன் (கவந்தம்), சித்தாந்தன் (அம்ருதாவின் புதிர் வட்டங்கள்), மருதம் கேதீஸ் (ஒளவை தரு முகிலி), கோகுலராகவன் (எங்கள் தெருவில்), ந.மயூரரூபன் (என்னைப் பற்றிய பிற்குறிப்பு), தானா விஷ்ணு (முடிவிலி), ஜுனியர் வரணியூரான் (தமிழ்ப் பௌத்தன்), சமரபாகு சீனா உதயகுமார் (சொத்து), கார்த்திகாயினி சுபேஷ் (இப்படியும்), தபின் (அம்மாவும் ஆட்டுக் குட்டியும்), குகபரன் (மௌனமாய்), சு.க.சிந்துதாசன் (வல்லூறுகளின் வேட்டை), அஜந்தகுமார் (மீளாமகன்), விஷ்ணுவர்த்தினி (சொந்தமில்லா பந்தங்கள்), க.பரணீதரன் (படமுடியாது இனித் துயரம்) ஆகிய படைப்பாளிகளின் ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61540).

ஏனைய பதிவுகள்