11773 கானல் வசந்தங்கள் (சிறுகதைகள்).

பைந்தமிழ்க் குமரன் (இயற்பெயர்: ஜே.டேவிட்;). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: சண் பிரின்டர்ஸ், 224, மத்திய வீதி).

xv, 140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4628-19-9.

பைந்தமிழ்க் குமரனின் சிறுகதைகள் தன்னையும் தான் வாழும் சூழலையும் தன் தொழில் அனுபவங்களையும் தன் கலாசாரத்தையும் சித்திரிப்பவையாக அமைகின்றன. வறுமையின் கொடுமை, வாழ்வியல் சூழலின் புதிய அனுபவங்கள், தொழில் அனுபவத்தின் காயங்கள்,  இனப்போராட்டச் சூழலின் வடுக்கள் என்றமையும் இவரின் கதைகள் தினக்குரல், தினகரன், தொண்டன், வெட்டாப்பு போன்றவற்றில் முன்னர் வெளியிடப்பட்டவை. சூனியப் பள்ளிகள், மண்டைபுரம், எக்ஸ்.வை, ஒரு அதிபரின் டயறியிலிருந்து, இரத்த நிலம், காகிதத் தோணிகள், ஒரு தரிசிப்பின் முடிவில், தொடக்கு, நாளைய இன்றில், காயங்கள், பாவம் அவள், யாசகம், கனவுகள் உதிர்ந்தபோது, சீர்திருத்தவாதி, அம்மா, இந்த நாடகம் எந்த மேடையில், விருது வாங்கல்லயோ விருது, புலராத பொழுதுகள், கருணையம்மா, கண்ணீர்த்துளிகள், விதிப்பறவை, எதற்காக ஆகிய தலைப்புகளில் 22 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்