மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). மாங்குளம்: மலரன்னை வெளியீடு, மலராலயம், கொல்லர் புளியங்குளம், 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: ஆரு கிறின்டேர்ஸ், 453, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு).
ix, 179 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-43209-2-5.
கச்சாயில் இரத்தினம் என்னும் பழம்பெரும் எழுத்தாளரின் புதல்வியான மலரன்னை எழுதிய 23 சிறுகதைகளின் தொகுப்பு இது. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. வலம்புரி, சங்குநாதம், செவ்வரத்தை, தமிழ்மிரர், காக்கைச் சிறகினிலே போன்ற ஊடகங்களில் 2016இல் பிரசுரமானவை. விடியலின் சாயல், பிரதிதானம், அனுதாபம், கீறல், அவள், கானக்குயில், வாசல் இல்லாத வேலி, பட்டால்தான் தெரியும், ஜெயித்தவன், மாறியது நெஞ்சம், பாரியின் வாரிசு, ஏக்கங்களின் பெருமூச்சு, இதமான நெருடல், பேசும் ஊமைகள், உன்னால் முடியும், கண்ணீரின் சங்கமம், போதை தெளிந்தது, வேரில் துளிர்த்தல், செய்யும் தொழிலே தெய்வம், மண்வாசனை, வினையமும் விளைவும், சத்திய முடிச்சு அவிழ்ந்தது, நிலைமாறும் உலகம் ஆகிய தலைப்புகளில் இவை பிரசுரமாகியுள்ளன. போருக்குப் பின்னரான தமிழ்ச் சூழலில் நிலவும் பிரச்சினைகளைக் கலைநயத்துடன் இத்தொகுப்பு பேசுகின்றது. கடந்த 30 ஆண்டுகளாகத் தன் இனம்சந்தித்த நெருக்கீடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நெருக்கடி, மதுப்பாவனையின் விளைவுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் பிரச்சினைகள், மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனச் சமகாலத்தைக் கதைகளினூடு பதிவாக்கியுள்ளார்.