11775 கோப்பாய் சிவம் சிறுகதைகள்.

பா.சிவானந்தசர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2 ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xxxii, 240 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4078-00-0.

கோப்பாய் சிவம் 1985இல் நியாயமான போராட்டங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பையும், 2004இல் தார்மீகக் கோபங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். இது அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. கடந்த 50 ஆண்டுகளில் இவர் எழுதிய பல்வேறு ரகச் சிறுகதைகளில் தேர்ந்த 35 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவை மூன்று தசாப்த காலத்திற்கு முன்னர் எழுதப்பட்டவை. பண்பு (குறுங்கதை), கணிப்பு, சிதைந்த கூடு, ஒரு மரண ஊர்வலம் புறப்படப் போகின்றது, அவனும் இவரும், நியாயமான போராட்டங்கள், நிழல்களும் நிஜங்களும், ஏக்கங்கள், தோல்வியிலும் அவனுக்கு ஒரு பெருமை, வாழை அழுத கண்ணீர், இழப்பின் பெருமைகள், ஓர் இதயம் கர்த்தரினால் மன்னிக்கப்படுகின்றது. உதயம், பொய்மையும் வாய்மையிடத்த, பிள்ளைத்தமிழ், முற்றுப்பெறாத இராகங்கள், மௌனங்கள் உடைகின்றன, இழப்பு, அன்னை சிரித்தாள், குழந்தை, தார்மீகக் கோபங்கள், இரசனைகள், எனக்குரிய இடம், பாவத்தின் பங்காளிகள், அரங்கேறாத ஆசைகள், தந்தை மகற்காற்றும் உதவி, அழகு, பைத்தியம் பிடித்த சில மனிதர்களும் பைத்தியமாக்கப்பட்ட ஒரு பெண்ணும், என் அப்பாவின் மனைவியின் தம்பி என் கணவனென்றால், அம்மாவுக்கு உண்மை புரிந்துவிட்டது, கூனல், மூன்றிற்குப் பிறகு, ஓஹோ அதுவா சங்கதி (நகைச்சுவைக் கதை), சங்கீதச் சமர் (நகைச்சுவைக் கதை), அதிர்ஷ்டம் (குறுங்கதை) ஆகிய கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பாக ஆசிரியரின் முன்னைய நூல்களுக்கான விமர்சனங்களும், ஆசிரியரின் பிற நூல்களின் நீண்ட பட்டியலும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61072).

ஏனைய பதிவுகள்

Pa Casinos on the internet 2024

Articles What makes A Bonus? A big List of On-line casino Slots You can Wager Enjoyable App Alternatives: Also, daily fantasy sporting events is actually

Free Revolves No deposit Bonuses Nz

Posts As to why Believe Our Casino 100 percent free Revolves Advice? All of our Spouse Sites Tips Join Inclave Gambling enterprises Without Put Bonus