11780 தஜ்ஜாலின் சொர்க்கம்.

லறீனா அப்துல் ஹக். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2016. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

xxxv, 36-191 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-6744-9.

ஒரே ஒரு கனவுகூட மிஞ்சவில்லை, பொம்புள, கறுப்பி, எனக்கான வெளி, எழுதப்படாத கவிதை, மனச்சருகு, ஸெய்நம்பு நாச்சி, தஜ்ஜாலின் சொர்க்கம், ஆத்தா, புளியமரத்துப் பேய்கள் ஆகிய 10 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. லறீனா அப்துல் ஹக் மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டவர். கவிதை, சிறுகதை, நாவல், ஆய்வுக்கட்டுரைகள் என இதுவரை 12 இற்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுள்ளார்.

2002 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் BA சிறப்பு பட்டத்தினை பூர்த்தி செய்த இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை, மொழி பெயர்ப்புக் கற்கைத்துறையிலும்; விரிவுரையாளராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. ‘சிங்கள தமிழ் ஆக்க இலக்கிய மொழி பெயர்ப்புப் பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்து தனது முதுதத்துவமாணி பட்டத்தை (M.Phil) நிறைவு செய்தவர். இவருடைய அன்னை பௌசுல் ஹினாயா என்பவரும் மாத்தளை பர்வீன் என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் 30 இற்கும் அதிகமான தொடர் கதைகளை எழுதியுள்ளார். இவருடைய தந்தை சிங்கள சினிமாத்துறையின் பிரபல இசையமைப்பாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61088).

ஏனைய பதிவுகள்

12725 – செந்தமிழ் பாப்பாப் பாடல்கள்.

பத்மா இளங்கோவன். யாழ்ப்பாணம்: நாவேந்தன் பதிப்பகம், மயூரன் இல்லம், இராமலிங்கம் வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி). (2), 47 பக்கம்,