தெணியான் (இயற்பெயர்: கந்தையா நடேசன்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
vi, 98 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-01-5.
எழுத்தாளர் தெணியான் அவர்கள் ஜீவநதி சஞ்சிகையில் எழுதி வெளியிட்ட ஆண்ட பரம்பரை, வெளுக்காத மனங்கள், திவ்விய வஸ்திரம், மோப்பம் பிடிக்கும், வாழ்வதற்காகத்தான், தாய்மாமன், மறுபக்கம், வாய்ப்பிறப்பு, காக்கும் தெய்வங்கள், பாதுகாப்பு ஆகிய பத்துச் சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தெணியான் என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் (பிறப்பு: சனவரி 6, 1942) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் விவேகியில் ‘பிணைப்பு’ என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை இதுவரை எழுதியிருக்கிறார். மேலும் இவர் கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரை அண்மையில் எழுதியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 230741).