அலெக்ஸ் பரந்தாமன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
xiv, (2), 66 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-38-1.
வறுமைக்கோட்டில் வாழும் மக்களினதும் நடுத்தர வர்க்கத்தினரினதும் வாழ்க்கை ஓட்டங்கள் இங்கு சிறுகதைகளாகியுள்ளன. அனைத்துக் கதைகளும் யதார்த்தமான வாழ்க்கையின் அல்லல்களின் விம்பங்களாக விழுந்து தெறிக்கின்றன. இக்கதைகளின் பகைப்புலங்கள், போர்க்கால உணர்வுகள் மற்றும் பெண்களின் கண்ணீருக்கும் மனக் குமுறல்களுக்கும் பின்னால் மறைந்திருக்கும் முகத்திரைகளைக் கிழிக்க ஆசிரியர் எத்தனித்துள்ளார். இயல்பான போர்க்கால வாழ்க்கையைக் கடந்து வந்த எவருக்கும் இக்கதைகளில் எங்கோ ஒரு பாத்திரப்படைப்பு தனக்கானதாக இருந்திருக்கும். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவரும் ஊடகத்துறையில் ஒப்புநோக்குநராகப் பணியாற்றுபவருமான பரந்தாமனின் இந்நூல், ஜீவநதியின் 58ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது. பாதை மாறிய பாதங்கள், மனப் புழுக்கங்கள், பொன்னாத்தை, வேண்டுதலும் வேண்டாமையும், மனச் சிதைவுகள், ஊனப்பார்வைகள், இறங்கு முகங்கள், நெருப்புத் தின்னிகள், கவிதையும் கத்தரிக்காயும், தோற்றுப் போனவளின் வாக்குமூலம் ஆகிய 10 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 249277).