11787 நீரில் கிழித்த கோடுகள்: சிறுகதைத் தொகுதி.

கே.ஆர்.டேவிட். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2015. (நெல்லியடி: பரணி அச்சகம்).

xii, 148 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-30-5.

மூத்த எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் அவர்களின் ஒன்பதாவது நூல். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஆசிரியர் எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இது. அவரது ஆரம்பகாலக் கதைகளுக்கும் சமகாலத்தில் அவரால் எழுதப்பட்டு வரும் கதைகளுக்கும் இடையே கருத்தியல் ரீதியாகவும், வளர்ச்சிநிலையிலும்  வித்தியாசங்கள் இருப்பதை இச்சிறுகதைத் தொகுதி வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இத்தொகுப்பின் கதைகள் ஏதோவொரு வகையில் சமுதாய இன்னல்களையும் தனிமனித துயரங்களையும் கலாபூர்வமாக வெளிப்படுத்துகின்றன. இவற்றில் பல வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களின் சோகங்களைக் கருவாகக் கொண்டமைந்தவை.  பல கதைகள் மனிதனது பசித் தேவையை முன்னிலைப்படுத்துகின்றன. வயிறு நிறையச் சோறு சாப்பிடுவம், ஒரு சோறு, ஊமைக் காயம், அவர்களுக்கென்று, வீதி ஓரத்து மரநிழல், முரண்பாட்டின் பிரசவங்கள், ஒரு தாயின் ஆசை, குறிசுடப்பட்டவர்கள், காலம் ஒரு தூரிகை, அனுபவங்கள் சாவதில்லை, கொதிநீர் குளிர்வதில்லை, நீரில் கிழித்த கோடுகள் ஆகிய 12 தலைப்புகளில் இக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இது 49ஆவது ஜீவநதி பிரசுரம்.

ஏனைய பதிவுகள்

ᐅ Betway Spielsaal Erfahrungen and Untersuchung 2024

Content Zahlungsverkehr Im Betway Kasino Casino Betway Kasino Payment Methods Dies Unterfangen Hinterm Spielsaal Anliegend dem Willkommensbonus bietet ihr Versorger nebensächlich zyklisch wechselnde Promotionen eingeschaltet.